search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரள மாடல் அழகிகள்"

    விபத்தில் மர்மமாக இறந்த கேரள அழகிகளை சொகுசு காரில் துரத்தி சென்ற டிரைவரை கைது செய்த போலீசார் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஆற்றிங்கல் பகுதியை சேர்ந்தவர் மாடல் அழகி அன்சி கபீர் (வயது 23).இவரும் இவரது தோழியும் மாடல் அழகியான ஆயுர்வேத டாக்டர் அன்ஜனா சாஜன் (26) ஆகியோர் மேலும் 2 பேருடன் கடந்த 1-ந்தேதி நள்ளிரவில் கொச்சி அருகே காரில் சென்றனர்.

    அப்போது மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென குறுக்கே புகுந்ததால் ஏற்பட்ட விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் ஒருவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பலியானார்.

    இந்த விபத்து குறித்து கொச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.போலீஸ் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது. விபத்து நடந்த பகுதியில் உள்ள ஓட்டலில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா காட்சிகளை அழித்ததாக தனியார் ஓட்டல் அதிபர் மற்றும் ஊழியர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் விபத்து நடந்த நேரத்தில் மாடல் அழகிகளின் காரை பின்தொடர்ந்து சொகுசு காரில் துரத்தி சென்றதாக டிரைவர் சாஜித் என்பவரை நேற்று போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இவர் கடந்த சில நாட்களாக போலீஸ் விசாரணைக்கு பயந்து தலைமறைவாக இருந்தார்.

    நேற்று கொச்சி குற்றப்பிரிவு போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜர் ஆகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து நேற்று அவர் போலீசார் முன்பு ஆஜர் ஆனார். அவரிடம் தீவிர விசாரணை நடத்திய போலீசார் உள்நோக்கத்துடன் அழகிகளின் காரை துரத்திச் சென்றதாக வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    மேலும் அவரை ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக போலீசார் கூறுகையில், இந்த வழக்கு விசாரணை இறுதி கட்டத்தில் உள்ளது.இதில் தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை நடந்து வருகிறது என்று கூறினர்.

    மிஸ் கேரளா(2019) பட்டம் வென்ற அழகி அன்சி கபீர் கார் விபத்தில் பலியான வழக்கில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
    கொச்சி:

    மிஸ் கேரளா(2019)  பட்டம் வென்ற அழகி அன்சி கபீர்(25 வயது) மற்றும் அழகி அஞ்சனா ஷாஜன்(26 வயது) மற்றும் அவர்களுடைய நண்பர் உள்ளிட்டோர் மர்மமான முறையிம் மரணம் அடைந்தனர். இவர்கள் மூவரும் நவம்பர் 1ம் தேதி அன்று கொச்சியில் ஏற்பட்ட கார் விபத்தில் பலியாகினர்.

    இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். கைதாகியுள்ள ராய் வயலாட் எனும் அந்த நபர், நம்பர்.18 எனும் ஓட்டலின் உரிமையாளர் ஆவார். சிசிடிவி பதிவுகளை அழித்த குற்றத்திற்காக அவருடன் சேர்த்து 5 ஓட்டல் ஊழியர்களையும் கைது செய்துள்ளது கேரளாவின் பாலரிவட்டம் காவல்துறை. 

    முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக காரின் ஓட்டுனர் அப்துல் ரகுமான் கைது செய்யப்பட்டிருந்தார். 

    எனினும் தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், கொச்சியை சேர்ந்த ஓட்டல் அதிபரை இந்த வழக்கில் கைது செய்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை அன்று 11 மணி நேரம் அவரிடம் விசாரணை நடைபெற்றது. அதில் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார். மேலும், இந்த வழக்கில் திடீர் திருப்பமாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
    கேரளாவில் கார் விபத்தில் பலியான 2 மாடல் அழகிகள் மரணத்தில் மர்மம் இருப்பதையடுத்து ஓட்டல் உரிமையாளரிடம் போலீசார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் அன்சி கபீர். இவரது தோழி அஞ்சனா சாஜன்.

    மாடல் அழகிகளான அன்சி கபீரும், அஞ்சனா சாஜனும் மிஸ் கேரளா அழகி போட்டியில் பங்கேற்று முதல் இரண்டு இடங்களை பிடித்தவர்கள் ஆவர்.

    இவர்கள் இருவரும் கடந்த வாரம் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்த விருந்தில் கலந்து கொண்டனர். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டனர். தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் அன்சி கபீர், அஞ்சனா சாஜன் இருவரும் பரிதாபமாக இறந்தனர்.

    இந்த விபத்து குறித்து எர்ணாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே மாடல் அழகிகள் அன்சி கபீர், அஞ்சனா சாஜன் சாவில் மர்மம் இருப்பதாகவும், விபத்து திட்டமிட்டு நடத்தப்பட்டதாகவும் புகார்கள் கிளம்பின.

    மேலும் எர்ணாகுளத்தில் விருந்து நடந்த ஓட்டலில் மாடல் அழகிகள் அன்சி கபீர், அஞ்சனா சாஜனுடன் சிலர் தகராறு செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இது தொடர்பாக எர்ணாகுளம் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். மேலும் அன்சி கபீர், அஞ்சனா சாஜன் இருவரும் விருந்தில் பங்கேற்ற ஓட்டலுக்கும் சென்று அங்கிருந்த கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    தொடர்ந்து அந்த ஓட்டலின் உரிமையாளரிடமும் விசாரணை நடத்தினர். சுமார் 7 மணி நேரம் அவரிடம் விசாரணை நடந்தது. இதுபற்றி எர்ணாகுளம் போலீஸ் உதவி கமி‌ஷனர் கூறும்போது, ஓட்டல் உரிமையாளரிடம் விசாரணை நடத்தினோம், அங்கிருந்த கண்காணிப்பு காமிரா காட்சிகளையும் கைப்பற்றி ஆய்வு செய்தோம். அதில் சந்தேகத்திற்கிடமான காட்சிகள் எதுவும் இல்லை, என்றார். 

    ×